Saturday, October 10, 2009

நல்லதோர் விதி செய்வோம்......

இறந்தவன்
இறுதிப்பயனத்தில்
எத்தனை பேர் வருகிறார்கள்
என்று
ஒரு முறை கண்களைத்
திறந்து பார்த்தான்.....

வாழ்ந்ததற்கு
வருத்தப்பட்டு மறுபடியும்
கண்களை மூடிக்கொண்டான்.

இது என்றோ நான் படித்த கவிதை. அன்றைய நிலையும் அதுவே. ஆனால் இன்றோ!!!....

இறந்த பின் அல்ல வாழும்போதே ஒரு முறை ஓரே முறை அறிவு என்னும் கண்களைத் திறந்து பார்த்தால்...வாழ்ந்த
பயன் மட்டுமின்றி இற‌ந்த பயனும் அடையலாம் என்கிறது விஞ்ஞானம். எப்படி?????.........


பல விதமான சாதி, சமயம், மதம் மட்டுமின்றி சடஙுகளுடன் பின்னிப் பினைந்ததுதான் இந்தியா. ஒருவர் வாழும்
பொழுது பின் பற்றும் சடஙுகளும் சம்பிரதாயஙளும் ஒரு புறம் இருக்க, பகுத்தறிவு பழகி வரும் அறிஞர்களாகிய நாம் இறந்தபின்னும் அதனை விடுவதில்லை.

சிறை வாசம் பழகிப்போன நமக்கு இறந்தபின்னும் ஆறடி நிலச்சிறை சிலருக்கு, பலருக்கு அதற்கு கூட வழி இல்லை. வெறும் சாம்பலாய்க் கரையும் அவலம். இப்படியே எத்துனைக் காலத்தை கழிக்கப்போகிறோம்???....தினம் தினம் பல இலட்சக்கண‌க்கான உடல்களை வெறும் சாம்பலாய் கறைக்கிறோம் உருப்புகளின் மதிப்பறியாது.

உங்கள் கண்களால் உலகை காணுங்கள் இறந்தபின்னும்....இது அரசாங்கம் பல வருடங்களாக நமுன் வழியுருத்தி வரும் கோரிக்கை. ஆனால் இதனையே முழுமையாய் செயல்படுத்தத் தவறிய இப்புண்ணிய பூமியில் எங்கோ வேறோரு மெல்லிய குரல் ஒலிக்கத் தொடங்கியுல்லது. அந்த குரல் முழு வலிமையடைய இன்னும் எத்த‌னை எத்தனை ஆண்டுகள் காத்திருக்கப் போகிறோம். நூற்றாண்டாகவா?? புரியாத புதிர் தான்..........

நான் இறந்த பின் என் தாயின் கண்ணீரை துடைக்க இயலுமா? விடை கேட்டால்: தெரியாது!!! ஆனால், ஒன்பது தாய்மார்களின் அழுகைக்கு ஆருதலாய் இருப்பேன் என்பது இன்றைய சமுதாயத்தின் வரப்பிரசாதம் அல்லவா??!!!... நம்முள் இருக்கும் ஒன்பது ராஜ உருப்புகள் ஒன்பது உயிர்களைக் காக்கும் ஆயுதங்களாம்.

பயனற்று சிறையில் அகப்பட விரும்புவோர் செல்லட்டும் அவர்களுக்கான சிறையில். சுதந்திரப் பறவைகளுக்கு இந்த உலகில் உலா வர மற்றும் ஓர் அரிய வாய்ப்பு. இப்போழுதோ ஓர் உடலில் இருந்து அல்ல ஒன்பது உடல்களில் இருந்து. இதற்கு இப்போதைய தேவை மனித நேய‌மும் குடும்பத்தினருக்கு எடுத்துக் கூரும் அமைதியான மனப்பான்மையும் தான். இறந்த பின் உடலை சொந்தம் கொள்ளும் சுற்றத்தினரே உருப்புகளை சொந்தம் கொள்ளாதீர் என தீர்மானமாய் உரைக்கும் காலகட்டம் இது. இத்தனை பெரிய இந்திய நாட்டில் ஆண்டிற்கு வெறும் 120 உருப்பு தானம் தான் செய்யப்படுகிறது என்னும் அரசாங்கத்தின் கணக்கெடுப்பு வேதனைக்குரிய விஷயமே.

எனக்கு தெரிந்த ஒரு தோழியின் குடும்பம். அவளின் தாயார் செய்த உருப்பு தானத்தால் பிழைத்தது தானம் பெற்றவரைச் சார்ந்து இருந்த ஐந்து உயிர்கள். இது நடந்தது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர். உயிர்களின் மதிப்பறிந்த ஆந்த அம்மையார் காப்பாற்றப்பட்ட ஐவருக்கும் தாய் தான் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. 15 வருடஙளுக்கு முன் அவருக்கு இருந்த மனித நேயத்திற்கும் தைரியத்திற்கும் நாம் சலைத்தவர்கள் அல்ல என்பதனை நிரூபிக்க வேன்டாமா.

சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் பின்னிப் பினைந்த பெரியவர்களை நான் நெருங்கவில்லை. இறந்த பின் மேலுலகம் இருக்கிறது என்னும் மகான்களை நான் எழுப்ப விரும்பவில்லை. இன்றைய நிலை உணர்ந்த மகாத்மாக்களை அழைக்கிறேன். நம் வாழ்வின் பெருமையை வாழ்ந்த பின்பும் நிலை நாட்டுவோம். வாருங்கள் தோழர்களே!!! விவேகமும் மனித நேயமும் இருந்தால்... ந்ம்மால் ஒரு சிறிய வழி மட்டும் அல்ல நல்லதோர் விதியையும் செய்ய இயலும் என நிரூபிக்க வாருங்கள்.

சாவின் விழிம்பில் இருப்பவருக்கு உயிர் கொடுபோம்...
அன்பே சிவம் என்னும் நிலை வகுப்போம்...

உயிர் கொடுக்கும் கடவுள் நீங்களாகவும் இருக்கலாம்....



வாருங்கள் நல்லதோர் விதி செய்யவோம்!!!

No comments: