Friday, October 9, 2009

எனது கற்பனைக் காப்பியம்.....

இந்தியா.....பல நாட்களாக என் கற்பனையில் உலா வந்த ஒரு காப்பியத்தின் தலைப்பு. என் உருப்புக்கள் ஒன்று சேர்ந்து இயங்க, இந்திய காப்பியத்தை ஆர்வத்துடன் தேட ஆரம்பிதேன். எனது வளர்ச்சி சிலருக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கலாம், ஆனால் பலருக்கு வெறுப்பை அள்ளி தெளித்திருக்கும் என்பதில் மட்டும் ஐயமில்லை. ஒவ்வொரு நொடியும் எனது வளர்ச்சி கண்டு என் தாய் மட்டும் வியப்பின் உச்சியில் நின்றாள். ஒவ்வொரு நொடியும் எனது தேடல் வளர்ந்து கொண்டே வந்தது. இருட்டில் இருந்து வெளி வர நான் ஆயத்தமாய் இருந்தேன். இப்படியாக, இந்திய காப்பியத்தை நான் தேடி வளர்ந்த நாட்கள் சுமார் 280 அளவில் இருக்க்லாம் (தேடும் வளர்ச்சியில் என் கவமனம் இருந்ததே தவிர, நாட்களில் இல்லை). நான் வருவேன் என்பதனை மட்டும் என் தாய் அறிந்திருந்தாள். மற்றவை எதுவும் அவளுக்குத் தெரியாது.

நான் தேடி வளர்ந்த நாட்கள் சில. எனினும் எனது கற்பனையில் எக்காப்பியம் பல விதமாக ஓடியது. எத்தனை அழகு!! எத்தனை செழிப்பு!! எத்தனை அழகிய நாகரீகம்!! எத்தனை எத்தனை என்று மேலும் எதையெடுத்து சொல்ல எதையெடுத்துக்காட்டிச் சொல்ல. என்ன சொல்ல. எப்படி சொல்ல. இப்படியாக ஓடியது இந்திய காப்பியம் என் கற்பனையில்.

அந்த இருட்டறையில், கற்பனையில் கவிதையில் ஓடிக்கொண்டிருந்த அக்காப்பியத்தை என் வாய் உச்சரிக்க மறுத்தது. அதனால் சொல்ல இயலவில்லை என்னால். தேடியதால் நான் ஓயவில்லை. மேலும் மேலும் தேடும் ஆர்வமே இருந்தது. உளைப்பிற்கு கூலி கிட்டும் நாள் வெகு தொலைவில் இருக்காது. அது போல என் தேடலுக்கு வெற்றி கிட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. என் பிற்ப்பிற்கு சில நொடிகளே இருக்க, உற்ச்சாகமாகினேன் நான். கடலில் மூழ்கியெடுத்த மகிழ்ச்சியா? நீல வானை எட்டிப்பிடித்த மகிழ்ச்சியா?? எவ்வகை மகிழ்ச்சி அடைந்தேன்??? தேடலின் வெற்றி சிறிது நேரத்தில் கிட்ட இருப்பதினால் எதுவும் புரியவில்லை. இப்போது யோசித்தாலும் ஒன்றும் புலப்படவில்லை.

இதோ!! என் தாய் எதிர் பார்த்த வரவு நிகழ்துவிட்டது. என் பிறப்பே எனது தேடலின் வெற்றியாக கிடைத்தது. என் கற்பனையில் ஓடிய இந்திய சரித்திரம், என் கண் முன்னே நின்றபொழுது, எனது ஏக்கம் புன்னகையாய் வெளி வரும் என‌ எண்ணியிருந்தேன். சற்றும் எதிர் பாராது எனது புன்னகையோ அழுகையாய் வெளி வந்தது. அந்த அழுகையை கேட்ட சுற்றத்தினர் வருந்தாமல் புன்னகைத்தது ஏனென்று தெரியவில்லை.

வெற்றியின் மகிழ்ச்சியில், தேடலின் ஏக்கத்தில் சிறிது கண்ணயர்ந்தேன். என்னை வாழ்த்த பலர் வந்திருக்கிறார்கள். எதுவும் நான் கவனிக்கவில்லை. ஒரு முறை என் தாயின் முகத்தை பார்த்த நியாபகம் இருக்கிற்து. நான் கண் விழித்தபொழுது எத்தனை நட்கள் சென்றது என்பதே தெரியவில்லை. வேறு எதிலும் என் கவனம் செல்லவில்லை. இந்திய காப்பியத்தை படிக்க ஆற்வமாய் இருந்தது. எனவே, பெருத்த எதிர்பார்புடன் எனது வெற்றியின் கணியை ருசிக்க எழுந்துவிடேன். எனது கடமைகளை என் தாய் கவனித்து கொண்டதால், காப்பியத்தை கையில் எடுத்து படிக்க ஆரம்பிதேன். கை தனது வேலையை செய்தாலும், மனமோ என் கற்ப்பனையை சிறிது எட்டிப்பார்த்தது. கோர்டும் சூட்டுமாக ஓடிய அக்கற்பனையை உண்மையாய் ரசிக்கப் போகும் ஒரு அரிய உணர்வு என்னுள். நிம்மதியாய், ஆனந்தமாய், அற்புதமாய், சலனம் என்பது சிறிதுமின்றி ஓடிய என் கற்ப்பனைக்கு இந்த உண்மைக்காப்பியம் மெருகூட்டும் என்னும் மகிழ்ச்சி என்னுள். எனது எதிர்பார்ப்புகளுக்கு அளவேயில்லை.

மிகுந்த ஆர்வத்துடன் அட்டையை திற‌ந்தேன். முதல் பக்கம் என எதிர்பார்த்த எனக்கு, இமயமலை வெடித்தாற் போன்ற‌ துன்பம் எனக்குள் நுழைந்தது என்பது மட்டும் தான் தெரியும். மற்றவை எதுவும் நினைவில் இல்லை. யார் இந்த நிலையை ஏற்படுத்தியது? பெருத்த ஆர்வத்துடன் அல்லவா இருந்தேன்? ஒன்றுமே விளங்கவில்லை. சற்று நேரம் பிடித்தது என் நிலைக்கு நான் வருவதற்கு. நடந்ததுதான் என்ன???

ஆம்! முதல் பக்கம் என்று தான் திறந்தேன். ஆனால் அது பொய்யாகியது. எத்தனையோ இலட்ச்ச கோடி பக்கங்கள் போயிருக்க வேண்டும். எத்தனை பக்கஙளோ?? எவர் அறிவார்? யார் இவ்வாறு கிழித்தெரிந்தது? இதன் ஆரம்பம் தான் என்ன? எப்படி இருந்தது இந்தியவின் நிலை? ஒன்றுமே தெரியவில்லை. படிப்பதா? வேண்டாமா? என்பதே குழப்பமாக இருந்தது எனக்கு. எனினும் மனதை தேற்றிக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். மக்களின் வாழ்க்கை முறையை அரிய ஆரம்பிதேன். அட! எத்தனை அழகான பிரிவுகள். எத்தனை அற்புதமான மனித உண்ர்வுகள்!அனைத்து நுட்பங்களையும் எடுத்துக்காட்டியது இந்தியக்காபியம் எனக்கு. அய்யகோ!! எந்த்தனை பாகுபாடுகள் "முன்" இருந்ததோ என் எண்ணிக் கலங்கியது என் மனம்.

மக்களின் மனத்தூய்மையை அற்புதமாய் விளக்கிக் காட்டியது இந்தியக்காப்பியம். எத்தனை அரிய கதைகளும் முடிவுகளும். எத்தனை விதமான நோக்கங்களும் பார்வைகளும். " ஒருவனுக்கு ஒருத்தி " என்னும் வார்த்தை எனது கண்களில் வந்து சென்றது. ஒரு வரிச் சொல்லாய் இருப்பினும் அஃது உலகநெறியையே உணர்த்தியது. எத்தனை விதமான வாழ்க்கை! எத்தனை விதமான் சூழல்கள்! எத்தனை அற்புதம்! வாழ்க்கையின் ஓரங்களை ஆராய்ந்து அறிந்து இதில் எடுத்துக் கூறியவர்கள்தான் எவரோ? கோர்ட் சூட் காப்பியமாய் அமையும் என் எதிர்பார்த்த எனக்கு வேட்டி சட்டை காப்பியமாய் அமைந்தது சிறிது மாறுதலை ஏற்படுத்தியது.

பல விதமான கேள்விகளுக்கு இதில் விடையைக் கண்டறிந்தேன். எனினும் என்னுள் பலப் பலக் கேள்விகள் முளைத்துக் கொண்டே வந்தது. இதன் முதல் எழுத்தாளர் யார்? எவ்வரிய கதைகளுக்கு சிற்பம் கொடுத்த சிற்பிதான் யார்?இக்கதைகளுக்கு உயிர் கொடுத்தவர்தான் யார்? இக்கதையில் வரும் புதிய கருத்துகளுக்கு மெருகூட்டிய புதிய ஆய்வாளர் யார்? இப்படியாக கேள்விகள் என்னுள் முளைத்துக்கொண்டேவந்தது. பக்கங்கள் மறைந்து கொண்டே வந்தன. கேள்விகளுக்கு விடை கிட்டும் என்ற நம்பிக்கையில் "முடிவை" நோக்கி நகர்ந்து கொண்டே வந்தேன்.

"இதுவும் கடந்து போகும்"என்னும் வரியை படித்த நியாபகம். அதே போல் அந்த அழகிய கவிதை தன் பாதையில் இருந்து தடம்மாறியது.இந்த மாற்றம் என் கற்பனைக்குப் பொருத்தமாக இல்லை. என்வே இம்மாற்றத்தை என் மனம் ஏற்க மறுத்தது. விரிந்த ஆல் கடலில் சலனமின்றிச் சென்ற ஒரு ஓடையில் ஊசி நுனி போன்ற ஓட்டை ஒன்று ஏற்ப‌ட்டால், பின் அந்த ஓடையின் நிலமையும் அதில் பயணம் செய்தவர்களின் நிலமையும் என்னவாகுமோ, அதே தான் நான் இந்தியக்காபியத்தின் அப்போது படித்துக்கொண்டிருந்த பகுதியின் நிலையும். மக்களில் இரு பாலைர் இருந்தனர்.

ஒருவர் "இலக்கியத்தின் போக்கோடு" செல்பவர்.
மற்றவர் "இலட்ச்சியத்தின் நோக்கோடு" வளம் வருபவர்.

இருவர்களிடம் என் கேள்வியை முன் வைத்தேன். கேள்வி: "இம்மாற்றத்தின் காரணம் என்ன்?"
முதலாமவர்: "விதி" என்றார்
பின்னவர்: "வினை" என்றார்

அறியப்படாதவர்களுக்கு ஒரு வார்த்தைதான் மாறியுள்ளதாய் அமையும். ஆனால் அறியப்பட்டவர்களுக்கோ இவ்விடையானது முற்றிலும் மாறுபட்டதாய் அமையும்.

எனக்கோ இரண்டாவது விடை சரியாகபட்டது. எனவே அதனையே எனது கொள்கையென மதித்து வருகிறேன். நான் இரண்டாவதை ஏற்றுக்கொண்டதனால் முதல் கருத்தை மறுக்கிறேன் என்று அர்த்தமில்லை.

சிறிது சிறிதாக மாறிய இக்காப்பியம் பின், ஒரு கட்டத்தில் முற்றிலுமாக மாறிவிட்டது. எனது மனமே வெடித்தாற் போல ஒரு உண்ர்வு. அட! எப்படி இருந்த காப்பியம் இப்படி மாறிவிட்டது என கலங்கியது என் மனம். பண்பாட்டின் சின்னமாய் விளங்கிய இந்தியக்காப்பியமா இது?? இப்பகுதியை எழுதிய எழுத்தாளந்தான் எவன்? என எரிச்ச்லூட்டும் கேள்வியும் என்னுள் தோன்றியது என்பதும் உண்மையே.

நான் படிக்க ஆரம்பித்த பகுதியில் நாகரீகம் என்பது தலைதூக்கி நின்றதே!!??..இப்போதோ??..என ஏங்கித்தவிதது என் மனம். இப்பகுதியை இயற்றியவன் எவன்? என்பது போல இலட்சனக்கணக்கான கேள்விகள் தோன்றிக்கொண்டே வந்தது. பின் வந்த பகுதியை படித்து என் மனம் கலங்கியது. இது ஒரு புறம் இருக்க, காப்பியம் முடியப்போகும் சந்தோஷம் மறுபுறம் இருந்தது. படித்துக் கலைத்து மனம் உருகி இருப்பேன் என எண்ணி இருந்தேன். ஏனோ! மனம் உடைந்து, நோந்து, அழுது கொண்டிருக்கிறேன்.இதோ, இதோ முடியப்போகிறது இக்காப்பியக் கதை. வாசிக்க மறுக்கிறது எனது வாய் தற்பொழுது. முடிவை எதிர்பார்த்து நோக்கிய எனக்கு அதே அதிர்ச்சி, "தொடரும்" என்னும் முடிவை பார்த்தபின்.

இதோ இருபத்திரண்டு வருடங்கள் படித்தாயிவிட்டன, ஆரம்பமும் முடிவும் தெரியாமல்!! இனி என்னவாகும் எனக் குழம்பிய என் மனதில், "வாழ்க்கையும் காப்பியமும் வேறல்ல" என்னும் வரி படித்தது நியாபகத்திற்கு வந்தது.

அட!! என்னவாயிற்று என கண்டுவிட்டேன். அடுத்த பகுதியின் ஆரம்பம் தெரிந்துவிட்டது. பயணங்கள் புரிந்துவிட்டன. பாதைகள் புலப்பட்டுவிட்டன. முடிவோ? அய்யகோ இவை கதைகள் அல்ல நிஜமா? இவ‌ர்கள் கதைமாந்தர்கள் அல்ல உண்மைப் பிரதிபலிப்பா? என்ன இது ஒழுக்கத்துடன் இருந்த " நாம் " தடமமாறிவிட்டோமா?? இந்த நிலை தொடர்ந்தால்???......


" பின்னவர்களுக்கு எனது கற்பனைக் காப்பியம் கற்பனையாகவே முடியும் "

1 comment:

yasaru said...

அய்யோ..chanceless ....என்னமோ டமீல் வராது அப்படி இப்படினு சொன்ன..சும்மா பட்டைய கெளப்புற...உண்மையிலேயே அருமையான கட்டுரைt...i never expect this from u...u have very good future in blog...u better register in anyone tamil blog collection like 'tamilish' 'tamilmanam.net'...now onwards we expect more from u....i wish u all the best...once again i tell register in anyone tamil blog collection website...ok ya..